தெற்காசியாவில் இலங்கைக்கு முதலிடம்!!
இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவேண்டுமென மின்சாரசபை பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி அலகிற்கு ரூபா 08 அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மின்சாரக் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.