1,000 தொன் அரிசி மியான்மாரிடமிருந்து அனுதாப நன்கொடையாக நாட்டிற்கு!!
1,000 தொன் அரிசியை இலங்கைக்கு கையளித்துள்ளதாக மியன்மார் அரச செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மியான்மர் வர்த்தக நகரமான யாங்கூனில் உள்ள துறைமுகத்தில் வைத்து இந்த அரிசி கையளிக்கப்பட்டது.
வெள்ளியன்று(02/09/2022) நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மியன்மார் மத்திய வர்த்தக அமைச்சர் யு ஆங் நயிங் ஓ,
இந்த நன்கொடை மியான்மர் அரசு இலங்கை மக்கள் மீது காட்டும் அனுதாபத்தின் அடையாளமாகும் என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நம்பிக்கையை அவர் நிகழ்வில் தெரிவித்தார்.
தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்த அரிசி நன்கொடை பெரும் உதவிகரமாக இருப்பதாக மியான்மருக்கான இலங்கை தூதுவர் ஜே.எம்.பண்டார குறிப்பிட்டதுடன் மியான்மர் அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.