102 ஆண்டு ஆனாலும் பழி வாங்க ‘2ம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக’ பரபரப்பு காணொளி விடுத்த இந்தியர் என கூறும் மர்மநபர்!!
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை (Queen Elizabeth) கொலை செய்யப்போவதாக இந்திய நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுதந்திர போராட்ட காலத்தில் 1919ம் ஆண்டு பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரித்தானிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது பிரித்தானிய இராணுவத்தினர் சுதந்திர போராட்டக்காரர்கள் மீது 1,650 முறை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர்.
நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த துயர நிகழ்வு இந்திய வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று பதிவானது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 102 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த படுகொலைக்கு பழிக்குப்பழியாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக தன்னை இந்திய சீக்கியர் என அடையாளப்படுத்தி கொள்ளும் நபர் ஒருவர் வெளியிட்ட காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராணி 2-ம் எலிசபெத் தங்கியிருக்கும் வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதத்துடன் ஊடுருவிய 19 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தற்போது இந்த காணொளி வெளியாகி உள்ளது.
எனவே,
இதுகுறித்து ஸ்கொட்லாந்து யார்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த காணொளியில் , முகமூடி அணிந்துகொண்டு பேசும் அந்த நபர் தனது பெயர் ஜஸ்வந்த் சிங் சைல் என்றும், தான் இந்திய சீக்கியர் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசும் அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்கு பழியாக ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்வேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.