யாழில் பட்டப்பகலில் பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய….. 18, 20, 23 மற்றும் 24 வயது இளைஞர்கள் கைது!!

யாழ் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ் . மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“நேற்று(30/06/2023) பகல் யாழ் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி உந்துருளியில் வந்த இருவரினால் இழுத்து ஏற்றி கடத்திச் செல்லப்பட்டார்.

அவரை கடத்திச்

சென்றவர்கள் உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கி காணொளி பதிவு செய்துள்ளனர்.

பின்னர் அவரை கைவிட்டு விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்தனர்.“

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பழக்கடை வியாபாரியினால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஜெகத் விசாந்தவின் கீழ் பதில் பொறுப்பதிகாரி உப காவல்துறைப் பரிசோதகர் பிரதீப் தலைமையில் இயங்கும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே தாக்குதல் நடத்திய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன்,

கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று(01/07/2023) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *