18 – 30 வயதுக்குட்பட்டோருக்கு அறிவிக்கப்பட்டது நாள்!!
செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே இதை தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் 3.2 மில்லியன் பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.