18 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்…. ஊவா மாகாண ஆளுநர் ஏஜேஎம் முஸம்மில்!!
ஊவா மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளும் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஆளுநர் ஏஜேஎம் முஸம்மில் தெரிவித்தார்.
அன்றையதினம் பாடசாலைகளை திறப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாகாணக் கல்வி அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இதேவேளை,
மேல் மாகாணத்தில் திர்வரும் 15 ஆம் திகதி 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.