இலங்கையில் மீண்டும் இன்று 2.3 ரிச்டர் அளவு நில நடுக்கம்….. இது எதற்கான அறிகுறி!!
இலங்கையில் மீண்டும் இன்றையதினம்(11/02/2023) காலை நில நடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட வெல்லவாய, புத்தலையில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 2.3 ரிச்டர் அளவில் இடம்பெற்றுள்ளதுடன்,
எந்தவிதமான உயிர்ச் சேதங்களும்,
பொருட்சேதங்களும் ஏற்படவில்லை எனவும்,
மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,
நேற்றைய தினம்(10/02/2023) மொனராகலை மாவட்டத்தில் 3.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் மூன்று பகுதிகளில்….. சுமார் 3 மெக்னிடியூட் அளவு திடீர் நிலநடுக்கம்!!