2022 ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை வெளியிடவுள்ளதாக தகவல்….. உண்மை நிலை என்ன??
இலங்கை மத்திய வங்கி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாளை வெளியிடவுள்ளதாக சமூ ஊடகங்கள் வாயிலாக செய்தி பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
10 ஆயிரம் பெறுமதியான நாணயத் தாளை அச்சிடும் எவ்வித தயார் நிலையும் இல்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை அச்சிட உள்ளதாக பொய்யான செய்தி பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே,
பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாகவே அரசாங்கம் 10 ஆயிரம் பெறுமதியான நாணயத்தாளை அச்சிட தயாராகி வருவதாக சிலர் போலியான தகவல்களை உருவாக்கியுள்ளனர் எனவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே,
அந்நிய செலாவணி கையிருப்பை துரிதமாக அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி இதற்கான திட்டங்களை ஏற்கனவே உருவாக்கியுள்ளது எனவும் அவர மேலும் தெரிவித்துள்ளார்.