இந்திய கிரிக்கட் கட்டுப்பட்டு வாரியத்தால் [BCCI] வெளியிடப்பட்ட இறுதி வீரர்களின் படி, டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவிருக்கும் IPL ஏலத்திற்கு 12 இலங்கை வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். மற்றும் [BCCI] வெளியிட்ட 2026 [IPL]இன் இறுதி தரப்பட்டியலில் 12 இலங்கை நட்சத்திரங்கள் பட்டியலிடப்பட்டுள்னர்.
இந்தப்பட்டியலில் வனிந்து ஹசரங்க , மதீஷபத்திரன மற்றும் மகேஷ் தீக்ஷண ஆகியோர் இடம்பெற்றுள்னர் இவர்கள் இருவருக்கும் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி இந்திய ரூபவுக்கு இடம்பெற்றுள்ளனர் . அனுபவம் வாய்ந்த சர்வதேச முன்னாள் வீரர்களாலான பத்தும் நிசங்க ,குசல்மெண்டிஸ் மற்றும் முன்னால் தலைவர் தாசன் ஷானக்க ஆகியோரும் ஏலத்தில் நுழைந்துள்ளார்.
மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புக்களான சரித அசலங்க , துணித்து வெல்லாலகே மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந் ஆகியோரும் ஏலத்தின் பட்டியலில் உள்ளனர் . குசல் பெரேரா, டிராவீன் மேத்ஜுஸ் மற்றும் இடது கைவேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னான்டோ ஆகிய மூன்று மேலதிக வீரர்கள் இடம்பெறுகின்றனர்
பட்டியலிடப்பட்ட 12 இலங்கை வீரர்களாக ;
- வனிந்து ஹசரங்க
- மதீஷபத்திரன
- மகேஷ் தீக்ஷண
- பத்தும் நிசங்க
- தாசன் ஷானக்க
- குசல்மெண்டிஸ்
- டிராவீன் மேத்ஜு
- குசல் பெரேரா
- பினுர பெர்னான்டோ
- விஜயகாந்த் வியாஸ்காந்
- துணித்து வெல்லாலகே
- சரித் அசலங்க
