பயணிகள் பேருந்து – கார் மோதி விபத்து….. 34 பேர் உடல் கருகி ஸ்தலத்திலேயே பலி!!
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் பேருந்து-கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 34 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அல்ஜீரியாவின் டமன்ராசெட் மாகாண சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தவேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலையில் இந்த பேருந்து அடோல் கிராமச்சாலையில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால்,
சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.
“பேருந்திற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் மரண ஓலமிட்டனர்” சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக பிரபல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 34 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.