ஜனாதிபதி செயலகத்திலிருந்த 40 வாகனங்கள் மாயமாம்!!
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
அதிபர் செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன.
அவற்றில் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனங்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.