5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஐகூ யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டு உள்ளது.
ஐகூ யு1எக்ஸ் சிறப்பம்சங்கள்
– 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
– ஆக்டாகோர் குவால்காம் 662 பிராசஸர்
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
– டூயல் சிம்
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 8 எம்பி செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ்
புதிய ஐகூ யு1எக்ஸ் ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 899 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 9930, 6 ஜிபி + 64 ஜிபி மாடல் 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11,035 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 1199 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 13,245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *