6 மாத குழந்தை யானை தாக்கி மரணம்!!

யானை ஒன்றின் தாக்குதலில் 6 மாத குழந்தை ஒன்று புதன்கிழமை (08/06/2022) மாலை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிலுள்ள ஒலுவில் பள்ளக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது,

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதக் குழந்தையே இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளது.

பள்ளக்காடு பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை தங்கியிருந்து செய்துவருவது வழக்கம்.

 

இந்நிலையில்,

சம்பவதினமான இன்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியிலுள்ள மரத்தின் கீழ் குழந்தையை படுக்க வைத்து விட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது,

அப்பகுதிக்கு திடீரென வந்த யானை மரத்தின் கீழ் படுத்திருந்த குழந்தையை தாக்கியது.

காயமடைந்த குழந்தை அங்கிருந்து மீட்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குழந்தை யானை தாக்குதலினால் ஏற்கனவே இறந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *