சந்நிதியான் தேர்த் திருவிழாவில் மட்டும் 70 பவுண் நகைகள் திருட்டு!!
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய
தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் முறைப்பாடு வழங்கி உள்ளனர் வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா நேற்று(09/09/2022) இடம்பெற்றது.
பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.
இதேவேளை,
இன்று(10/09/2022) முருகனிற்க்கான தீர்த்த உற்சவம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்றைய நாளில் பதிவாகிய முறைப்பாடுகள் மற்றும் பெறுமதிகள் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.