இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இலங்கையை வந்தடைந்துள்ளது.

ஒருநாள் தொடர் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஜனவரி 22, 24, 27 ஆகிய தேதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ரீ20 தொடர் அதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரீ20 சர்வதேச தொடர் ஜனவரி 30, பெப்ரவரி 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முக்கியத்துவம்: இந்த ரீ20 தொடர், வரவிருக்கும் ரீ20 உலகக் கிண்ணத்துக்கான முக்கியமான தயாரிப்பு போட்டிகளாக கருதப்படுகிறது
