முகநூல் நண்பனிடம் மோட்டார் வாகனத்தை பறிகுடுத்த விமானப்படை சிப்பாய்!!
கொழும்பு, பம்பலப்பிட்டியில் முகநூல் நண்பனிடம் விமானப்படை சிப்பாய் ஒருவர் மோட்டார் வாகனத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நண்பனை மிகவும் நுட்பமாக பம்பலப்பிட்டியவுக்கு வரழைத்து அவரது 28 லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனத்தை திருடி சென்று வாடகை வாகனமாக மாற்றிய விமாப்படையின் முன்னாள் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சந்தேக நபர் மோட்டார் வாகனத்தில் காட்சிப்படுத்திய போலி தகடு, போலி ஆவணங்கள், அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் காவல்துறையினாரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.