வைத்தியசாலை சிற்றுாழியர் முகத்தில் காட்டு பாதையில் வைத்து திரவம் ஒன்றை ஊற்றி தாக்குதல் முயற்சி!!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சிற்றுாழியரான பெண் மீது ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் காட்டு பகுதியில் வைத்து முகத்திற்கு திரவம் ஒன்றை ஊற்றப்பட்டதுடன் தாக்குதல் முயற்சி இடம்பெ ற்றுள்ளது.
திரவத்தை வீசிதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கண்கள் பாதிக்கப்பட்டு குறித்த சிற்றுாழியர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தூரபிரதேசங்களில் இருந்து
வனப்பகுதிகளை கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்ற பெண் சிற்றூழியர் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு தன்னுடைய கடமைகளை நிறைவு செய்து நேற்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து கொக்காவில் வீதி துணுக்காயில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது வனப்பிரதேசத்தில் வீதியில் நின்ற இருவர் குறித்த ஊழியர் மீது ஏதோ ஒருதிரவத்தை வீசியுள்ளனர்.
இதனால் கண்கள் பாதிக்கப்பட்ட குறித்த ஊழியர் மோ ட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்ல முடியாத நிலையில் அருகில் இருந்த ஒரு பொதுக்கிணற்றில் சென்று முகத்தை கழுவியபோதும் கண்ணில் பார்வை சீராகாத நிலையில் குறித்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் அடை ந்து அங்கிருந்து அவசர தொலைபேசி ஊடாக நோயாளர் காவுவண்டியை அழைத்து மாவட்ட
வைத்தியசாலைக்கு வருகை தந்திருக்கிறார்.
இந்நிலையில் அவருடைய கண்களில் பார்வை பிரச்சினை ஆகியுள்ள நிலையில் என்ன திரவம் வீசப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வை த்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.