நியூசிலாந்தின் வடக்கு பகுதி மாகாணங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாங்கணுய் எரிமலையில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது இதனால் மழையின் அடிவாரத்தில் முகாம் அமைத்து தங்கியிருந்த பெண்கள் குழந்தைகள் என ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மண்ணுக்குள் அடியில் சிக்கியுள்ளனர்.தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டு சில குரல்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்
அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர் இருப்பினும் மீண்டும் நிலச்சரிவு ஏட்படும் அபாயம் இருந்ததனால் மீட்புக்குழுவினர் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது ;நிலம் சரிந்து கொண்டு இருக்கும் போதே மீட்பு குழுவினர் மீட்பு பணியினை தொடங்கி விட்டனர் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை சரியாக சொல்ல முடியத்துள்ளது அனால் நிறைய பேர் சிக்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்
