நாடாளுமன்றத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று (14) உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது,
அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான பணியாட் தொகுதியினரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,
இதுவரை 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதன் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் வெளி நபர்கள் வருகை தருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது