புதிய விதிமுறைகளுடன் மூன்று மாதங்களுக்கு மின் வெட்டு இனி இல்லை என அறிவிப்பு வெளியிட்ட பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!!
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிமுறைகளின் கீழ் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கான அவசியம் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கான புதிய வழிமுறைகளை அமுல்படுத்துவதாக இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய,
பாரிய அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள், தினமும் 4 மணித்தியாலங்கள் தங்களிடமுள்ள மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி , மின்சார தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்போர் மாலை 06 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை குளிரூட்டிகளை பயன்படுத்த வேண்டுமாயின், தங்களின் பிரத்தியேக மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர,
அரச நிறுவனங்களிலும் மின்சார பாவனையை வரையறுப்பதற்கு புதிய வழிமுறையினூடாக அறிவிப்புகள் விடுக்கப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.