எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்மானித்துள்ளோம்….. GMOA!!
எதிர்வரும் திங்கட்கிழமை (21) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தன்னிச்சையாக சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் பிரசாத் (Vasan Ratnasingam Prasad) தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,
மத்திய குழு மேற்கொண்டுள்ள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான தீர்மானம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழுவுக்கு அனுப்பி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.