சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இடம்பெற்ற, பெண்கள் மட்டும் பயணம் செய்யும் கட்டனமில்லா 10 “பிங்க் “பஸ்க்களினையம் பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலயத்திற்கும் 50 பொலீரோ வாகனங்களையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகளிர் விடியல் பயணம் திட்டம் கடந்த மே 2021 இல் தொடங்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று ,5 வழித்தடங்கள் ஒவொரு வழித்தடத்திலும் 2 பஸ் என மொத்தம் 10 பஸ்கள் பிரத்யோகமாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பஸ்களின் இயக்கத்தினை தொடங்கி வைத்தார் .
மேலும் இந்த பஸ்களின் கண்டக்ட்டர் பெண்கள் இவர்களுக்கு சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ள்ளது இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ,தா.மோ அன்பரசன் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்
