இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும்
என்பதால், வீதித் தெரிவுத்திறன் குறைவு காரணமாக வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன்,
களுத்துறையிலிருந்து மன்னார் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோர மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
