12வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்
12 வயதிற்குற்ப்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும்,சமூக ஊடக தளங்களை அணுகுவதை தடை செய்வதற்காகவும் நடக்கடிக்க எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
உலகம் முழுவதும் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களிடையே பாடசாலை சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை அத்தகைய மாதிரிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்
சிறுவர்கள் இணையத்தை பயன் படுத்தும் போது ஒழுக்க ரீதியாக தீங்கு விளைவிக்கும் மற்றும் துஸ்ப்பிரயோகங்களிலும் ஈடுபடுவதாக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன இதனால் இதனை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ள்ளது
இந்திலையில் , சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறைக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது , இதற்கு ஏற்கனவே அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
