நாளை யாழில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம்!!
ஜனநாயகததிற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை,
குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கடந்த ஏழு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் போராட்டத்தில் பங்குபற்றி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை அளிக்க முன்வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.