ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் , சஞ்சய் தத் உள்ளிட்ட பலர்நடித்து வரும் துரந்தர் 2 படப்பிடிப்பில் விதிமீறல்கள் நடந்ததாக கூறி , படக்குழுவினர் மீது மும்பை காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்
தெற்கு மும்பையில் உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் கோட்டை பகுதியில் கடந்த முதலாம் படப்பிடிப்பு நடைபெற்றது அதன்போது முறையாக அனுமதி பெறாமல் ட்ரான் கேமராக்களை பயன்படுத்தியதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன இது தொடர்பாக மும்பை எம்.ஏ,மார்க். காவல்நிலைய அதிகாரிகள் ,படப்பிடிப்பு தள முகாமையாளர் ரிங்கு ராஜ்பால் வால்மீகி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க கோடடை பகுதியில் பாகிஸ்தானின் பழைய மற்றும் நெரிசலான தெரு போன்ற தோற்றத்தில் மாற்றப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது பெப்ருவரி 1ம் திகதி நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர் முக்கியமான ஒரு காட்சியை ட்ரான் மூலம் படமாக்க முயன்றபோது காவல் துறையினர் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
