Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Rajagobal Nithusan February 6, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T124402.885

எதிர்வரும் டி20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி பங்களாதேஷ் இத்தொடரில் இருந்து விலகிய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானும் விலகப் போவதாகத் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், பாகிஸ்தான் அரசாங்கம் பாகிஸ்தான் அணி விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாட அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
குழு ‘A’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் 2 புள்ளிகளை இழக்க நேரிடும்.
இதனால், அரையிறுதிக்கு முன்னேற மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பது குறித்துப் பேசிய அணித்தலைவர் சல்மான் ஆகா, “இது எங்கள் முடிவல்ல; அரசின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும். போட்டிகளில் வெல்வதே எங்கள் வேலை,” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அரையிறுதி அல்லது இறுதியில் மீண்டும் இந்தியாவை எதிர்கொள்ள நேரிட்டால் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.

கடந்த 2024 உலகக் கிண்ணத்தில் அமெரிக்காவிடம் தோற்று வெளியேறிய கசப்பான அனுபவத்திலிருந்து மீள பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.
பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் மற்றும் துடுப்பாட்ட வரிசையில் ஏற்படும் சரிவுகள் அந்த அணிக்குத் தொடர் சவாலாக உள்ளன.

குறிப்பாக, அனுபவ வீரர் மொஹமட் ரிஸ்வான் நீக்கப்பட்டு, உஸ்மான் கான் போன்ற மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொஹமட் நவாஸ், ஷதாப் கான், சாய்ம் அயூப் ஆகிய சகலதுறை வீரர்களுடன் அப்ரார் அஹமட் மற்றும் உஸ்மான் தாரிக் கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.
ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலைமையிலான வேகப்பந்து வீச்சு வலுவாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவை 2-1 என வீழ்த்தியது மற்றும் அவுஸ்திரேலியாவை 3-0 என வெள்ளையடிப்பு செய்தது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்தியாவுடனான போட்டியை இழக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி தவறுகளுக்கு இடமில்லாமல் விளையாடினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

Post navigation

Previous: 2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி
Next: அடுத்த மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Related News

Gemini_Generated_Image_ct8qvct8qvct8qvc-ezgif.com-png-to-jpg-converter
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

அடுத்த மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T121921.884
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • அடுத்த மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  • இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா
  • 2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி
  • விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?
  • வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

Gemini_Generated_Image_ct8qvct8qvct8qvc-ezgif.com-png-to-jpg-converter
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

அடுத்த மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T124402.885
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T121921.884
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.