புதிய எரிபொருள் அட்டையொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும்….. அமைச்சர் கஞ்சன விஜேசேகர!!
சுற்றுலாத்துறைக்கு தேவையான எரிபொருளை வழங்க புதிய எரிபொருள் அட்டையொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதி பாத்திரம் தொடர்பில் (QR) இன்று காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்த வழிமுறைகள் குறித்து அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஒரு தொலைபேசி எண் மூலம் பல வாகனங்களை பதிவு செய்தல் என பல விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.