இலங்கைக்கு 45,000 டொலர்களை நன்கொடையாக வழங்கிய இரு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்!!
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இந்தத் தொகையை வழங்கியுள்ளனர்.
சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘யுனிசெப்’
ஊடாக இந்தப் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா
இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.
இந்த போட்டிகளின்போது பெற்றுக்கொண்ட பரிசுத்தொகையினையே அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.