ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் உட்பட பல ராணுவ வாகனங்களை சேதப்படுத்திய….. உக்ரைனின் கிரீமியா ரஷ்ய விமான படை தள தாக்குதல்!!
கிரீமியா தீபகற்பத்திலுள்ள ரஷ்ய விமான படை தளத்தில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில்
ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் சேதடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கிரீமியாவிலுள்ள சாகி விமான படை தளத்தில் செவ்வாய்க்கிழமை(10/08/2022) குண்டுகள் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில்
அந்த விமான தளம் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுகள் வெடித்தபோது,
அந்த விமான தளத்தில் போர் விமானங்கள்,
கண்காணிப்பு விமானங்கள்,
ராணுவ போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ‘பிளானட் லேப் பிபிசி’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில்
சாகி விமான நிலையத்தில் சுமார் 2 கி.மீ சுற்றளவு புல்வெளி நிலம் எரிந்துபோயிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும்,
விமான தள ஓடுபாதை அருகே காணப்படும் பள்ளங்கள்,
அங்கு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளதைக் காட்டுகின்றன.
குண்டுவெடிப்புக்கு முன்னதாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்துடன் ஒப்பிடுகையில்
தற்போது அங்கிருந்த பல போர் விமானங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.