சர்வதேச புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வென்ற ஈரான் நடிகை “Tarane Alitosti” கைது!!

ஈரானின் பிரபல நடிகை தரனே அலிடோஸ்டி (Actress Tarane Alitosti) அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் எதிர்ப்பாளர் ஒருவரை தூக்கிலிட ஈரானிய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை கண்டித்து தனது சமூக ஊடக கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக சர்வதேச அளவில் உரிய கவனம் செலுத்தப்படாததையும் அவர் கண்டித்ததாக பதிவில் கூறியுள்ளார்.

38 வயதான அலிடோஸ்டியும் ஒஸ்கார் விருது பெற்ற “தி சேல்ஸ்மேன்” படத்தில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.

ஈரானிய அதிகாரிகள் அந்நாட்டின் மேலும் இரண்டு பிரபல நடிகைகளான ஹெங்காமே கஜியானி(Iranian actress Hengame Ghaziani) மற்றும் கட்டயுன் ரியாஹி(Iranian actress Katayoun Riahi) ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

எனினும் இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 16 அன்று 22 வயதான மசா அமினியின் மரணத்திற்குப் பிறகு,

ஈரானில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் இந்த எதிர்ப்பு ஈரானுக்கு மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *