சிறப்பிட்டி வளைவில் கவிழ்ந்தது 750 பேருந்து!!
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த
யாழ் – பருத்தித்துறை (750) பேருந்து வண்டியானது சிறப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வளைவில் வேகமாக வந்து திருப்ப முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து
அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றினுள் நுழைந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் பயணிகள், திருத்தக ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மேலும் அறிய முடிகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.