தனியாக வந்து CCTV ஐ கவனிக்காமல் சுலபமாக கொள்ளையிட்டு சென்ற நபர்!!

அம்பலாந்தோட்டை நகரில் நேற்று(15/01/2023) கட்டடப் பொருட்கள் கடையின்

பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர் ஒருவர் கடையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக கடையின் உரிமையாளர் அம்பலாந்தோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபர் கடையின் பிரதான கண்ணாடி கதவை சேதப்படுத்தி இந்த திருட்டைச் செய்துள்ளார்.

மேலும்,

அருகில் உள்ள மேலும் 2 கடைகளின் கதவு சாவிகள் உடைக்கப்பட்டுள்ளபோதிலும் சந்தேக நபர் உள்ளே நுழையவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனியாளாக வரும் சந்தேக நபர்,

பிரதான கண்ணாடி கதவை உடைத்து கடைக்குள் நுழைவது நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபர் இதற்கு முன்னர் தங்காலை ரன்ன ஹங்கமவில் உள்ள கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பலாந்தோட்டை நகரில் நேற்று(15/01/2023) கட்டடப் பொருட்கள் கடையின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர் ஒருவர் கடையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக கடையின் உரிமையாளர் அம்பலாந்தோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபர் கடையின் பிரதான கண்ணாடி கதவை சேதப்படுத்தி இந்த திருட்டைச் செய்துள்ளார்.

மேலும்,

அருகில் உள்ள மேலும் 2 கடைகளின் கதவு சாவிகள் உடைக்கப்பட்டுள்ளபோதிலும் சந்தேக நபர் உள்ளே நுழையவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனியாளாக வரும் சந்தேக நபர்,

பிரதான கண்ணாடி கதவை உடைத்து கடைக்குள் நுழைவது நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபர் இதற்கு முன்னர் தங்காலை ரன்ன ஹங்கமவில் உள்ள கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *