பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக…… வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவித்தல்!!
மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.
அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலை மறைக்கும் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வருமாறும்,
வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து வருமாறும் சம்பந்தப்பட்ட கல்வித் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பி உள்ளோம்.
இதற்கு ஆளுநரின் ஒப்புதலும், தலைமைச் செயலாளரின் ஒப்புதலும், கல்வித்துறை செயலாளரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
டெங்கு தொடர்பான ஆபத்து நிலை நீங்கும் வரை இதனை செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.