விசேட தேவையுடையோருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்….. போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் அனுமதி!!
விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர்களின் இந்த உடன்படிக்கையுடன்,
அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.