பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு….. இந்தியாவில் கொடுமை!!
இந்தியாவில் பழங்குடியினப் பெண்கள் இருவர் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய `மைதேயி’ சமூக மக்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `குக்கி’ பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர்.
இதில் ஒருவருக்கொருவர் மோதியதில்,
கலவரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, முகாம்களில் உயிருக்கு பயந்துகொண்டு தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில்,
குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற இளைஞர்கள் சிலர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும்,
பி பைனோம் கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் இருவரும், அந்தக் கும்பலால் கொலைசெய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்ய தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் எஸ்.சி/எஸ்.டி தேசிய ஆணையம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறது.