அடுத்த ஆண்டுக்கான உயர்தரப்பரீடசைகள் பிற்போடுவது தொடர்பில் கல்வியமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினையும்,
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தையும் பாதிக்கும் என்பதால் இதனை அனுமதிக்க முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் உயர்தரப் பரீட்சை
எழுத எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்பதால் அதனைப் பிற்போட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட ஆளும் – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் போதே உயர்தர பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று(05/09/2023) தெரிவித்தார்.
இதன்போது,
மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகும் காலம் போதாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.