சற்றுமுன்னர் வெளியானது தமிழ் பொதுவேட்பாளரின் பெயர்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான என்.ஸ்ரீகாந்தா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை (08) யாழ்ப்பாணத்தில் (jaffna) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் வேட்பாளர்களுக்கான இறுதிப் பட்டியலில் இருக்கும் நிலையில் இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார்.

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *