கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள் என்று தகவல் வைரலாகப் பரவிவந்த சமயத்தில் இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் C அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த் 173 வது திரைப்படத்தினை நடிக்கவிருப்பதாக கமல்ஹாசனும் அவருடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கும் என்றும் கூறப்படுகின்றது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்படுகின்றது.
இதற்கிடையே, ரஜினி – கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதியபடம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி ரஜினியின் 173 வது படத்தை சுந்தர் C இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
