கடந்த 02.11.2025 ஞாயிற்றுக்கிழமையன்று வடமராட்சி மண்ணில் உள்ள பருத்தித்துறை “SS Complex” திரையரங்கில் ஈழத்தின் முதலாவது விண்வெளித் திரைப்படமான புஷ்பக 27 திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவன் அம்சன் கிருஸ்ணா அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படத்தைக் காண்பதற்கு பலதரப்பட்ட ஈழ சினிமா ஆர்வலர்கள் வருகைதந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத்தருணத்தில் எமது பசங்க FM குழுவினரும் திரைப்படத்தைக் காண்பதற்காக சென்றிருந்தோம்.
புஷ்பக 27 திரைப்படமானது கதை ரீதியாக பார்த்தோமானால் சத்யா மெண்டிஸ் அவர்கள் எடுத்துக்கொண்ட கதை உயர்தரத்திலான தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஈழவளநாட்டின் தொன்மையான வரலாற்று கதையைக் கொண்டு அந்தத் தொன்மையை தேடியும் காட்டியிருக்கின்றார் விண்வெளி ஆழம்வரை சென்று. முழுக்கக முழுக்க பல தமிழ்ச்சொற்களைக் கொண்டு விண்வெளிக்கான மொழியை தமிழில் கையாண்டுள்ளது ரசிக்க வைக்கின்றது. மேலும் கதைக்கான பல வேலைப்பாடுகளில் நன்றாகக் கவனம் செலுத்தியுள்ளார் சத்யா மெண்டிஸ் ராவணனின் விமானத்தின் பெயரே “புஷ்பக” அதனைத் திரைப்பத்தின் பெயராகக்கொண்டு இராவணனின் அறிவியல் திறனை விளக்குகின்றார். தமிழர் யார்? அவர்கள் தொன்மைக்காலத்திலேயே விண்வெளி வரை சென்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அழுத்தமான கதையை சொல்லியிருக்கின்றார் சத்யா மெண்டிஸ்.
மேலும் கதைக்கு வலுச்சேர்க்கும் வகையில் காட்சியமைப்புக்ககளுடன் முழு வேலையில் ஈடுபட்டுட நம்மை முழுக்க ரசிக்க வைத்திருக்கின்றார் இயக்குநர் காரை சிவனேசன் திரைப்படத்தின் படத்தொகுப்பினையும் கிராபிக்ஸ் காட்சிகளையும் இவரே கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல காட்சிகளில் எம்மை வியப்பிலும் ஆழ்த்தியுள்ளார். திரைப்படத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் பின்னணி இசை காணப்பட்டாலும் இன்னும் சற்று நன்றாகக் கொடுத்திருக்கலாமென்று எண்ண வைக்கின்றது. இருந்தாலும் திரைப்படத்திற்கு தேவையானவகையில் நன்றாக அமைந்துள்ளது இசை. இத்திரைப்படத்தில் நாம் எவ்வளவு தூரத்திற்கு பொசிட்டிவ் ஆக பார்த்தாலும் சில வகையான நெகட்டிவ் ஆன விடயங்கள் காணப்படுகின்றன இந்தத் திரைப்படமானது தயாரிப்பதற்கு அதிகமான பொருட்செலவுகளாகும் முறையாக அவற்றைப் பயன்படுத்தி எடுத்திருந்தால் உலகசினிமா தரத்தில் இருந்திருக்கும் ஆனபோதும் இவர்களுக்கு கிடைத்த நிதியில் தங்களிடம் உள்ளதை வைத்து முடிந்தவரை காட்சியமைப்புக்களில் பிரம்மிக்க வைத்திருந்தார்கள். இத்திரைப்படம் 10 வருடங்களாக எடுக்கப்பட்டு வந்ததால் சற்று இன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் தரம் குறைவாக உள்ளது.
மேலும் விண்வெளி நிலையங்கள் காணப்படும் பிரதேசமான யாழ்ப்பாணம் 2040 இல் இன்னும் பெரிய சிற்றியாக காண்பித்திருக்கலாம், உயர்ரக வாகனங்களை விண்வெளி ஊழியர்கள் பயன்படுத்தியிருக்கலாம். வீடுகள், அயற்புறங்கள் மற்றும் சாலைகள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி கதையை நகர்த்தியிருக்கலாம். மேலும் திரைக்கதையை சற்று நீடித்து கதையை அழுத்தமாக பதிய வைத்திருக்கலாம். இவை அனைத்தும் குறைகளாக காணப்பட்டாலும் பலகாட்சிகளின் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் இத்திரைப்படத்திற்கு வலுச்சேர்த்திருப்பதுடன் இரசித்து பார்க்க வைக்கின்றது. ஈழசினிமாவில் இதுவரை வெளிவராத உயர்தர கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட திரைப்படமென்ற பெருமை புஷ்பக 27 இனைச் சேரும். மொத்தத்தில் “புஷ்பக 27” ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய எம் தொன்மையான வரலாறு. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
மேலும் பலரின் கருத்துக்கள் விமர்சனங்கள் காணொளியாக
