கொரோனாவைப்போன்று 8 இலட்சத்துக்கும் அதிக வைரஸ் – எச்சரிக்கிறது ஐ.நா

கொரோனா வைரஸ் போன்று 8 இலட்சத்துக்கும் அதிகமான வைரஸ்கள் உள்ளதாகவும் அவை மனிதர்களுக்கு தொற்ற வாய்ப்புள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது

சீனாவில் உருவாகி தற்போது உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொற்றானது கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இதற்கு Severe acute respiratory syndrome (SARS) கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

சீனாவில் உருவான சார்ஸ் கிருமிதான் மரபணு மாற்றமாகி கொரோனா வைரஸாக மாறியுள்ளது என சில பல்கலைக் கழகத்தின் வைரஸ் ஆராய்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இன்னும் பல நோய்த் தொற்றுகளை எதிர்கொள்ள விருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்களின் பருவநிலைக்கு எதிரான நடவடிக்கைகளால் நாளுக்கு நாள் இயற்கை பாதிப்படைந்து வருகிறது என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, கொரோனா வைரஸ் போன்று 8.5 லட்சத்துக்கு அதிகமான வைரஸ் கிருமிகள் விலங்குகளிடம் உள்ளன. அதன்மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *