மங்கையை இறையருளாய் வணங்கினோம் தாய்வழி வந்த ஆண்மக்கள் நாமானோம் இருந்தாலும் நாம் வந்த வழி மறந்து பெண்மையை மதியாது ஆணாதிக்கத்தில் ஆடுகின்றோம். தாய்மையின் அருமையை அறியாத ஆண்களின் கைகள் பெண்மையை சீண்டும் ஒரு பயணமா பெண்களின் இராப்பயணம் பேரூந்து அரசுடமை அதனுள் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு யாருடமை? வீண் சோலி வேண்டாமென்று அமைதியாய் இருக்கும் என் சகோதரிகளை நான் பார்த்தேன் பேரூந்தில் வீண் சோலி எம்மை சீண்டுவதால் வீண்சோலியாகிவிடாது அது எம் சோலி அதை தட்டிக்கேட்பது சரிதானே ஏன் மௌனம்? எதற்கு பயம்? ஆனாலும் பேரூந்தில் பயணிக்கும் எம் சகோதரிகளின் பாதுகாப்பிற்கு யார் சொந்தக்காரர்? ஆண்மக்களாக நாம் ஒவ்வொருவராக இருந்தாலும் பேரூந்தின் நடத்துனர் ஓட்டுநர் பாதுகாவலர்கள் இல்லையா?
ஒரு ஊடகவியலாளனாக நான் கண்டேன் ஒருவன் பல பெண்களைச் சீண்டுவதை ஆனால் அதை யார் தட்டிக்கேட்டார்கள் நான் ஊடகவியலாளனகா அவ் இடத்தில் அழைத்தேன் நடத்துனரை அங்கு பாதிக்கப்படட்டவர்கள் அமைதி காத்தனர் என்ன காரணம் பயம் மாத்திரமே.. அசட்டையில் தூங்கும் நாம் கவனிப்பதில்லை எதையும் என்பதை அறிந்த காவலிகளின் எண்ணம் தான் இதற்கு காரணம் ஆனால் எம் பாதுகாப்பை நாம் உறுதிசெய்வது நன்று… இன்று பல பெண்கள் தமக்கு நடடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்க யாருமில்லாது அச்சத்தில் மூடி மறைத்து வாழுகின்றார்கள் அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் ஆண்மக்களாகிய நாம் நடந்துகொள்வது எம் சகோதரிகளின் பாதுகாப்பிற்கு வழிகாட்டும். 55 வயது நிரம்பிய ஒருவர் பெண்களை சீண்டி வருகின்றார் பேரூந்தில் ஆனால் அவரை நாம் அமைதியாகக் கடக்கின்றோம் இது முறையா இல்லை இவர்களுக்கு நாம் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமானால் அதனைத் தட்டிக்கேட்பதே நாம் ஒவ்வொருவரும் கவனமாகச் செயற்ப்டால் இவ்வாறான காவலிகள் அச்சத்தில் பெண்களைத் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்.
நேற்றைய தினம் 11.11.2025 இரவு 09.00 மணியளவில் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த அரச பேரூந்தில் நான் பயணிக்க வேண்டியதாயிற்று இந்த பேரூந்தில் இன,மத,மொழி பேதமின்றி அனைவரும் பயணித்தோம் அதிகமான பெண்கள் தங்கள் கல்வி சார் தேவைகளுக்காக கொழும்பு சென்று மீண்டும் பருத்தித்துறை மற்றும் ஏனயை பல இடங்கள் நோக்கிப் பயணித்தார்கள். இறுதி ஆசனங்களில் நான் இருந்து வந்ததால் முன் ஆசனங்களில் என்ன நடக்கின்றது என்பதை காணமுடிந்தது. அந்த வகையில் 55 வயது மதிக்கத்தக்க சிங்கள மொழி பேசும் ஒருவரின் சேட்டையை நான் அவதானித்தேன். தனது ஆசனத்தின் அருகில் ஜன்னல் ஓரமாக உறக்கத்தில் இருந்த ஒரு சிங்கள பெண்ணுடன் சேட்டையில் ஈடுபட்டார் அந்த பெண் சற்று திட்ட முற்படும் போது எழுந்து முன் சென்று நடத்துனருடன் பேசுவது போல நடித்துவிட்டு மீண்டும் வந்து அந்து தனது சேட்டையை தொடர்ந்தார் சற்று நேரத்தில் அந்தப் பெண் தனது இறங்கு தளத்தில் இறங்கியதும் அவர் எதிர் ஆசனத்தில் இருந்த ஒரு பெண்ணுடன் சேட்டை விட ஆரம்பித்தார் அதனை நன்கு அவதானித்த அந்தப்பெண் தன்னைக் கவனப்படுடத்தியவாறு இருந்ததை நான் அவதானித்தேன் மேலும் அந்த நபர் எழுந்து அங்கும் இங்குமாக சென்று ஆசன ஓரங்களில் இருக்கும் பெண்களின் கைகள் மற்றும் பாகங்களில் எதார்த்தமாக உரசியவாறு நடந்து திரிந்தார். இதனை பெண்கள் அவதானித்தாலும் அச்சத்தில் அமைதியாக இருப்பதை நான் அறிந்தேன் உடன் வாகன நடத்துனருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இவரின் சேட்டைகள் பற்றி கூறினேன். நடத்துனர் இவரை தன் கட்டுக்குள் கொண்டுவந்து ஆசனத்தில் அமரச்சொன்னார் அவ அவ்வாறு அமரச்சொல்விட்டு சென்ற சற்று நேரத்திலே மீண்டும் தன் வேலையைத் தொடங்கினார் பின்பு சற்றுத் தூரத்தில் தான் இறங்குமிடத்தில் இறங்கி சென்றுவிட்டார்.
இவரின் சேட்டைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சத்தின் காரணமாகவே அமைதியாக இருந்தார்கள் ஆகவே சகோதரிகளே எதற்கும் அஞ்சவேண்டாம் உங்களுக்கு எதிரான அநீதிகளை நீங்கள் தடட்டிக் கேளுங்கள் அப்போது தான் உங்களுக்கான நியாயம் கிகைகும் உங்கள் மீது கை வைப்பதற்கு இவ்வாறான காவலிகள் அஞ்சுவார்கள் மேலும் அரச பேரூந்து நடத்துனர்கள் இவ்வாறன பிரச்சனைகளில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கையாளுங்கள் உங்களை நம்பி வரும் சகோதரிகளுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளியுங்கள் உங்கள் செயற்பாட்டின் மூலமே அவர்கள் தைரியமாக நடமாட முடியும். இவ்வாறான காவலிகளைக் கண்டால் உடன் நடவடிக்கை எடுங்கள்.
