Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்புகின்ற இலங்கை கிறிக்கெற் அணி வீரர்கள்
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்புகின்ற இலங்கை கிறிக்கெற் அணி வீரர்கள்

admin November 13, 2025
PS

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்திருந்தார்கள். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியினர் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 293 ரன்களே எடுத்திருந்தார்கள். இதனால் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (பிற்பகல் 3 மணி) நடக்கிறது. இதற்கிடையே, இஸ்லாமபாத்தில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதனால் இலங்கை அணி அங்கு தொடர்ந்து விளையாடுமா? என்ற சந்தேகம் நிலவியது. 

இதனைத்தொடர்ந்து, இஸ்லாமபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு கவலை இருப்பதாகவும், உடனடியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் 8 இலங்கை வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனர். 

பதற்றமான சூழலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர் பிரெட் செனவிரத்னே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியை சந்தித்து பாதுகாப்பு பிரச்சனை குறித்து ஆலோசித்தார். அப்போது அவர் இலங்கை வீரர்களுக்கு அரசு  விருந்தினர்கள் போல் உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். 

பின்னர்  போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மொசின் நக்வி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி உத்தரவிடட்டார். அத்துடன் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறார். 

சில இலங்கை வீரர்கள் தாயகம் திரும்ப விரும்புவதாக தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் கூறினர். அவர்களை சந்தித்து பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் என்று மொசின் நக்வி கேட்டுக்கொண்டார். இதனிடையே, பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்ப கோரிக்கை வைத்த இலங்கை வீரர்களை அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. தொடரில் இருந்து பாதியில் வெறியேறக்கூடாது எனவும், விலகினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அணி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Post navigation

Previous: இராப்பயணத்தில் அரச பேரூந்தில் பெண்களின் நிலை
Next: இது கெம்பா எனெர்ஜி – அஜித்குமார் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.