இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. கடந்த 11ம் திகதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 289 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. சதமடித்து அசத்திய பாபர் அசாம் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
