ஐஒஎஸ் 14.2 – அந்த கோளாறு ஏற்படுவதாக பயனர்கள் அதிருப்தி

ஐஒஎஸ் 14.2 அப்டேட் இன்ஸ்டால் செய்ததும் ஐபோனில் அந்த கோளாறு ஏற்படுவதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

ஐபோன்களை புதிய ஐஒஎஸ் 14.2 தளத்திற்கு அப்டேட் செய்வோருக்கு பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய ஒஎஸ் அப்டேட் செய்தவர்களில் பலர் இந்த பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கோளாறு ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் எக்ஸ், ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ 2020 உள்ளிட்ட மாடல்களில் ஏற்படுவதாக தெரிகிறது. ஐபோன் மட்டுமின்றி ஐபேட் ஒஎஸ் 14.2 அப்டேட் செய்தவர்களுக்கும் இதேபோன்று பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும் கோளாறை சரி செய்யும் அப்டேட் வழங்குவது பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐஒஎஸ் 14.2 இன்ஸ்டால் செய்தவர்களில் பலருக்கு 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை பேட்டரி தீர்ந்து போவதாக கூறப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *