2026 ஐ.பி.எல் சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கின்றது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலைவரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.
அந்தவகையில் சி.எஸ்.கே 11 வீரர்களை விடுவித்துள்ளது. ஜடேஜாவை Trade மூலம் விடுவித்துள்ளது. அவருடன் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, பதிரனா, சாம் கர்ரன் (Trade – ராஜஸ்தான்). அந்த்ரே சித்தார்த், தீபக் ஹ}டா, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், விஜய் சங்கர் ஆகியோரை விடுவித்துள்ளது.
