பிக்பாஸ் வீட்டில் ரியோவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ரியோவுக்கு ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளார்களாம்.
ரியோ ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘பிளான் பண்ணி பண்ணா’ என்கிற பாடலை இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியிட உள்ளனர். இப்படத்தின் நாயகன் ரியோவும் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் படத்தின் புரமோஷனுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என கருதி அங்கு வெளியிடுகின்றனர். படக்குழுவினரின் இந்த முடிவு ரியோவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பாடலை பிரேம்ஜி பாடியுள்ளார்.