2026 ஐ.பி.எல் சீசனுக்கு முன்னதாக அடுடுத்த மாதம் டிசம்பர் 16ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கின்றது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய விரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலைவரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.
அந்தவகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 வீரர்களை வெளியிட்டுள்ளது. கொல்கத்தா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய ரஸலை விடடுவித்துள்ளது. அதேபோல் அதிக தொகைக்கு வாங்கிய வெங்கடேஷ் அய்யரையும் விடுவித்துள்ளது.
அத்துடன் லவ்னித் சிசோடியா, டிகாக், அன்ரிச் நோர்ட்ஜே, ரஹ்மதுல்லா குர்பாஸ், மொயீன் அலி, ஸ்பென்சர் ஜான்சன், சேத்தன் சக்காரியா ஆகியோரை நீக்கியுள்ளது. தற்போது தன்வசம் 64.3 கோடி ரூபாயை வைத்துள்ளது. இந்த தொகையுடன் மினி ஏலத்தில் செல்ல இருக்கிறது.
