ரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்
பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக அவர் இந்திய சினிமாக்களில் வரும் பாட்டுகளுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடுவது எல்லாம் மிகவும் பிரசித்தமானது.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
அதில், ரஜினி போல் மாறிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தர்பார் படத்தில் வரும் ரஜினி போல வேடமிட்டு உள்ளார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று லைக்குகள் குவித்து வருகிறது.