இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்கக்காரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி ககடந்த நான்கு சீசன்களில் இரண்டுமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்தியய அணியை வழிநடத்திய ராகுல் டிராவிட் கடடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயறி;சியாளரானார். ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியைத் துறந்தார்.
இதனால் 2026 ஐபிஎல் தொடடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்கக்காரவையே தலைமை பயிற்சியாளராக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நியமித்துள்ளது. தற்போது குமார் சங்கக்காரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் கிரிக்கெட் இயக்குனராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
